vanakkam

நண்பர்களே...
நான் கா.சு.துரையரசு. பத்திரிகையாளர். திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் பகுதியில் உள்ள காளாஞ்சிபட்டி என்ற குக்கிராமத்தில் பிறந்தவன். இன்று நகரவாசியாக இருந்தாலும் நான் புழங்கிய கிராம வாழ்க்கை இன்னும் நெஞ்சுக்குள்ளேயே பசுமையாக இருக்கிறது. அதனைப் பகிர்வதற்கென்றே இந்த வலைப்பூ...

Comments

T E Narasimhan said…
Dear Durai,
First let me congratulate you for the work you are doing. I would say this is one of the best blogs i have seen. It's very informative and whenever i go through your blog it takes me to village side and giving a nice feeling.

Keep up the good work
திண்ப‌ண்டங்கள் குறித்தான உங்கள் பதிவு:

மிகவும் அருமை....அதுவும் அந்த சுத்து மிட்டாய் என்னை மீண்டும் குழந்தைப் பருவத்துக்கே அழைத்துச் சென்றது.
உங்கள‌து பதிவின் மூலம் காசு மிட்டாயும் (அஞ்சு அல்லது பத்து பைசா உள்ளே மறைத்து வைக்கப்பட்டிருக்கும்.) எனக்கு ஞாபகம் வந்தது.

அப்புறம் உங்கள் ஊரில் மஞ்சள்னெத்தி மரம் இருப்பதில்லையா...?அந்த மரத்தை எங்கள் ஊர் தவிர்த்து மற்ற இடங்களில் நான் பார்த்ததில்லை...பெரிய மரத்தில் சிறிய தேன் மிட்டாய் அளவில் காய்கள் பசை நிறத்தில் இருக்கும்..பழுத்தால் அடர்கறுப்பான நிறத்தில் மாறும்.... பல மதிய நேரங்களில் இவற்றை நான் உணவாக உண்டுள்ளேன்...

துவக்கப்பள்ளி குறித்து உங்கள் பதிவு:

எங்கள் பள்ளியில் ஒன்னாப்புக்கும் ரெண்டாப்புக்கும் ந்டுவில் பின்னப்பட்ட‌ ஒரு தட்டி இருக்கும்..எனது நண்பன் இரண்டாம் வகுப்பு படிக்கும்போது பழைய வகுப்பு டீச்சரின் மேல் உள்ள அன்பில் தட்டியின் ஓரத்தின் வழியே
மறுபடியும் ஒன்னாம் வகுப்பில் போய் உக்கார்ந்த்து விடுவான்.

உங்கள் பதிவுகளுக்கு மிக்க மிக்க நன்றி.
அருமையான முயற்சி! தின்பண்டங்கள் பதிவில் தின்னதை கக்கச் சொல்லும் விஷயம், அடேயப்பா....! எத்தனை அழகாய் பதிந்திருக்கிறீர்கள்! எத்தனை முறை கக்கச் சொல்லியிருக்கிறேன், சொல்லப்பட்டிருக்கிறேன். தொலைந்து போன வயதுகளோடு தொலைந்து போன நினைவுகள் அவை. அற்புதமாய் நினைவுபடுத்தியிருக்கிறீர்கள். ஜியாமென்ட்ரி பாக்ஸ், நாங்கள் அதை காமஸ் டப்பா (கண்டிப்பாய் காரணப் பெயர்தான்..என்ன காரணம் என்றுதான் தெரியவில்லை) என்போம். எப்பொழுதும் வாடா போடாதான், ஆனால் எதற்காகவாவது கெஞ்சுகிற நேரத்தில் மட்டும் சரியாய் வந்து சேர்ந்துவிடும் அந்த "ப்பா". ஏம்ப்பா,கொஞ்சங்கானம் (கொஞ்சம்) குடுப்பா!............... பல் விழும் வரை அதை நோண்டிக் கொண்டேயிருப்பது, விழுந்த பின் அந்த வெற்றிடத்தை நாவால் நிரடிக் கொண்டேயிருப்பது, அப்படிச் செய்தால் புதிய பல் தெத்துப்பல்லாய் முளைக்கும் என்ற அறிவுறைகள் அல்லது மிரட்டல்கள், அதையும் மதிக்காமல் மீண்டும் அந்த வெற்றிடத்தை வருடும் நாக்கு, அந்த சுவாரஸ்யத்தில் வெளியே வழிந்து விடும் எச்சில்... இன்னும் எத்தனையோ நினைவுகள்...உங்கள் பதிவை படித்ததன் விளைவாய் ஒன்றொன்றாய் நினைவுக்கு வரத் தொடங்குகிறது. நன்றி தோழா! தொடரட்டும் உங்கள் முயற்ச்சிகள்! வாழ்த்துக்கள்!.
-பொ.வெண்மணிச் செல்வன்
durai said…
dear friends,

thank you so much for the valuable comments. They are 100% heartiest. I need your support forever.

thanking

durai

Popular posts from this blog

தலையில்லாத முண்டம்

கோவைப்பழம்

புளியம் பிஞ்சு