Posts

Showing posts from 2011

எம்.ஜி. ஆர். வாழ்க...!

Image
எம்.ஜி. ஆர். வாழ்க என்று நான் சொல்வது இன்றல்ல. நாங்கள் அநேகமாக நான்காம் வகுப்பு அல்லது ஐந்தாம் வகுப்பு படித்துகொண்டிருந்த போது அன்றைய எம்.ஜி. ஆர். தலைமையிலான தமிழக அரசு, பள்ளி மாணவர்களுக்கு இலவச பல்பொடி வழங்கியது. மாதத்திற்கு இரண்டு பல்பொடி பொட்டலங்கள் தருவார்கள். அது கோல்கட் டூத் பவுடர் போலவே இருக்கும். எங்களுக்கு அது ரொம்ப பிடிக்கும். பலர் "அப்படியே" சாப்பிட்டு விடுவார்கள். எங்களுக்கு அதில் ஒரு விளையாட்டு இருந்தது தெரிய வந்தது. விளையாட்டு செய்முறை : அரை பாக்கெட் பல்பொடியை எடுத்து வாயில் போட்டுக்கொள்ள வேண்டும். ஆனால் விழுங்கவோ, எசில்படுதவோ கூடாது. வனத்தை நோக்கி பார்த்துக்கொண்டே இப்பூ என்று ஊத வேண்டும். உடனே ஒரு பெரிய புகை மண்டலம் வனத்தை நோக்கி செல்லும். எப்போதெல்லாம் பல்பொடி கொடுத்தார்களோ அப்போதெல்லாம் புகை மண்டலம்தான். பல மாணவர்கள் இனிப்பு சுவைக்கு ஆசைப்பட்டு முழு பல்பொடியையும் சாபிட்டுவிட்டு வயிற்று வலி வந்து மருத்துவ மனை சென்ற கதைகளும் உண்டு. இப்படியாப்பட்ட எம்.ஜி. ஆர். வாழ்க என்று நாங்கள் அந்த வயதில் கோஷம் போட்டுக்கொண்டே சென்றதில் என்ன ஆச்சர்யம் இருக்கிறது? (அண்ணா கொ

கம்பு எனும் தேவாமிர்தம்.

Image
கிராமத்து தின் பண்டங்கள் வரிசையில் எனது இளம் பருவத்தில் கிடைத்த அற்புதமான மற்றொரு இயற்கை தின்பண்டம் கம்பு. கம்பங்கொல்லையில் (கம்பு காடு என்று சொல்லக் கூடாது) முற்றிய கம்பை உருவி, கையில் போட்டு கசக்கி, சோங்கு (அதில் உள்ள தூசு) நீக்கி சாப்பிடலாம். கடுக் கடுக் என்று நன்றாக இருக்கும். முற்றிய கம்பை கொண்டு வந்து வறுத்தும் தின்பார்கள். அனால் அது எனக்கு பிடிக்காது. முற்றும் நிலைக்கு முன்பு இருக்கும் கம்பு சுவையானது. மென்று தின்னும்போது அதில் பால்(சாறு) வரும். மிகுந்த சுவை தருவது அதுதான். கம்பை வேக வைத்து உண்டாலும் சுவையே. காய்ந்த கம்பை எடுத்து உரலில் குற்றி (குத்தி என்பது கொச்சை தமிழ்) மாவாக்கி கம்பு மாவு உருண்டை செய்து சாபிடுவர்கள். கோவிலில் பிரசாதமாகவும் படைப்பது உண்டு. அந்த சுவை சிலருக்கு பிடிக்காது. கம்பஞ்சோறு ஒரு நல்ல , சத்தான உணவு. கம்பன் சோற்றுக்கும் கருவாட்டுக் குழம்புக்கும் அப்படி ஒரு பொருத்தம். அதைவிட அற்புதம் அதை நீச்சுத் தண்ணீரில் (சோறு வடித்த நீர்) ஊற வைத்து மறு நாள் சாப்பிடுவது. கொஞ்சம் வசதியாக சாப்பிட்டால் தேவலாம் என்று தோன்றுகிறதா ? அப்படி நீச்சுத் தண்ணீரில் ஊறிய கம்பன்சோற

நெடு நாள் கழித்து...

நீண்ட நாட்கள் கழித்து வந்திருக்கிறேன். நண்பர்கள் பொருத்தருள்க. இனி தொடர்ந்து பதிவுகள் இடம்பெறும்.புதிய புதிய விஷயங்கள் கிடைத்திருக்கின்றன . பேசுவோம். பேசி தீர்ப்போம்.