எம்.ஜி. ஆர். வாழ்க...!


எம்.ஜி. ஆர். வாழ்க என்று நான் சொல்வது இன்றல்ல. நாங்கள் அநேகமாக நான்காம் வகுப்பு அல்லது ஐந்தாம் வகுப்பு படித்துகொண்டிருந்த போது அன்றைய எம்.ஜி. ஆர். தலைமையிலான தமிழக அரசு, பள்ளி மாணவர்களுக்கு இலவச பல்பொடி வழங்கியது. மாதத்திற்கு இரண்டு பல்பொடி பொட்டலங்கள் தருவார்கள். அது கோல்கட் டூத் பவுடர் போலவே இருக்கும். எங்களுக்கு அது ரொம்ப பிடிக்கும். பலர் "அப்படியே" சாப்பிட்டு விடுவார்கள். எங்களுக்கு அதில் ஒரு விளையாட்டு இருந்தது தெரிய வந்தது.
விளையாட்டு செய்முறை:

அரை பாக்கெட் பல்பொடியை எடுத்து வாயில் போட்டுக்கொள்ள வேண்டும். ஆனால் விழுங்கவோ, எசில்படுதவோ கூடாது. வனத்தை நோக்கி பார்த்துக்கொண்டே இப்பூ என்று ஊத வேண்டும். உடனே ஒரு பெரிய புகை மண்டலம் வனத்தை நோக்கி செல்லும். எப்போதெல்லாம் பல்பொடி கொடுத்தார்களோ அப்போதெல்லாம் புகை மண்டலம்தான். பல மாணவர்கள் இனிப்பு சுவைக்கு ஆசைப்பட்டு முழு பல்பொடியையும் சாபிட்டுவிட்டு வயிற்று வலி வந்து மருத்துவ மனை சென்ற கதைகளும் உண்டு.


இப்படியாப்பட்ட எம்.ஜி. ஆர். வாழ்க என்று நாங்கள் அந்த வயதில் கோஷம் போட்டுக்கொண்டே சென்றதில் என்ன ஆச்சர்யம் இருக்கிறது? (அண்ணா கொடி வாழ்க என்றும் கோஷம் போடுவோம். அர்த்தம் தெரியாது. நான் வெகு நாட்களாக எனது அரை ஞான் கயிற்றைத்தான் வாழ்த்துகிறேன் என்று நினைத்துக் கொண்டிருந்தேன்.)

Popular posts from this blog

தலையில்லாத முண்டம்

கோவைப்பழம்

புளியம் பிஞ்சு