ஞாயிறு, 15 ஆகஸ்ட், 2010

கிராமங்களில் , குறிப்பாக சற்றே வறண்ட பகுதிகளில் வா அவரை காய்ச்சி என்ற பெயரிலான மரங்கள் இருக்கும். அவற்றுக்கு ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒவ்வொரு பெயர் என்பதால் அடுத்த பதிவில் அம்மரத்தின் புகைப்படத்தை போட்டுவிடலாம் என்று இருக்கிறேன்.
(iframe https://www.amazon.in/gp/product/B07BNZKT7S/ref=as_li_tl?ie=UTF8&tag=pattikkadu-21&camp=3638&creative=24630&linkCode=as2&creativeASIN=B07BNZKT7S&linkId=29ca4d1f999d595edde35a6ab29d3bd4 iframe/) சரி
கதைக்கு வருவோம். இந்த வா அவரை காய்ச்சி மரத்தின் பூ இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும். மென்று பார்த்தால் கொஞ்சம் புளிப்பாக இருக்கும். நாங்கள் அதை சாப்பிடுவோம். முக்கியமான உணவு அது இல்லை. அம்மரத்தின் இலைகளை உருவி (பிடுங்குவது என்று சொல்ல கூடாது. அடுக்கடுக்காக இலை இருந்தால் அதனை உருவுவது என்றுதான் சொல்ல வேண்டும்.) அதனுடன் கொஞ்சம் காய்ந்த மிளகாய், கொஞ்சம் வெள்ளம், கொஞ்சம் கல் உப்பு எல்லாவற்றையும் போட்டு அரைக்க வேண்டும். அம்மிதான் உத்தமம். மசியலக அரைத்த பிறகு சாபிட்டால் அற்புதமாக இருக்கும். இதனுடன் தக்காளி ரசம் துணை சேர்ந்தால் அட்டகாசமாக இருக்கும். செலவில்லாத உணவுப் பண்டமாக இது எங்கள் இளமை பருவத்தில் இருந்தது. இன்றைய குழந்தைகளுக்கு அந்த மரத்தின் பெயர் கூட தெரியாது என்பதுதான் சோகம்.

சனி, 14 ஆகஸ்ட், 2010

இனிய நண்பர்களே,

வணக்கம். நீண்ட நாட்களுக்குப் பின்னர் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி. இனி தொடர்ந்து பதிவுகள் இடம் பெறும் என்று உறுதி அளிக்கிறேன். அதேபோல இந்த வலைப்பூவில் நீங்கள் என்னென்ன விஷயங்கள் இடம்பெறலாம் என்ற ஆலோசனைகளையும் வழங்க வேண்டுகிறேன்.
அன்புடன்
கா. சு. துரைஅரசு

சனி, 23 ஜனவரி, 2010

புளியம் பிஞ்சு


புளியம் பிஞ்சு என்பது ரொம்ப சாதாரண விஷயம் என்று ஒருபோதும் நினைத்துவிடதீர்கள். புளியமரம் என்பது ஒரு கற்பக தரு மாதிரி. புளியமரம் எங்களது சிறு வயதில் ஏகப்பட்ட தின்பண்டங்களை வாரி வழங்கி இருக்கிறது. புளியம் பூ பார்த்திருக்கிறீர்களா? அதை கொஞ்சம் பிடுங்கி சாப்பிட்டுப் பாருங்கள். புளிப்பும் இனிப்புமாக புது சுவையாக இருக்கும். கொஞ்சம் துவர்ப்பும் தட்டுப்படும். பூ லேசாக பிஞ்சாக பரிணாமம் பெறும் . சுண்டு விரலைவிட மிக சிறிதாக இருக்கும். அப்படியே கடித்து சாபிடலாம். உடைத்தல் வெண்டைக்காய் போல ஓசை வரும். இந்த பிஞ்சுகளை அரைப்பதமாக அரைத்து (அரைக்கும்போது அதனுடன் கொஞ்சம் வெல்லம் , காய்ந்த மிளகாய் சிறிது உப்பு ஆகியவற்றையும் சேர்ப்பது அவசியம்). இந்த புளியம்பிஞ்சு துவையல் பற்றி கேட்கும்போதே உமிழ் நீர் சுரக்கிறதல்லவா! கிராமப்புறங்களில் பாக்கெட் மணி என்ற விசயமே எங்களுக்கு வைத்ததில்லை. எனவே இது போன்ற இயற்கை தின் பண்டங்கள்தான் எங்களின் உயிராக இருந்தது. அடுத்த பதிவில் புளியின் மற்ற அவதாரங்கள் பற்றி சொல்கிறேன்.


சமூகம் மாறவேண்டுமானால், சமூகவியலும் மாறவேண்டும்!

  நான் சமூகவியலில் முதுகலைப்பட்டப் படிப்பை அண்மையில் படித்து நிறைவு செய்தததை நண்பர்கள் அறிவீர்கள். எனது தமிழ்நாடு திறந்த நிலைப்பல்கலைக் கழகம...