Posts

Showing posts from 2009

பிரண்டை சட்னி

Image
நண்பர்களே, காள ஞ்சிபட்டி வாழ்கையில் எனக்கு நிறைய தின்பண்டங்கள் கிடைத்தன. அவை எல்லாம் கடைகளில் கிடைக்காதவை. அவற்றை ஒவ்வொன்றாக இனி வரும் பதிவுகளில் பார்க்கலாம். பிரண்டை சட்னி வேலிகளிலும் காடுகளிலும் குறிப்பாக கள்ளி மரங்களில் படரும் பிரண்டை கொடிகளை பார்த்திருக்கிறீர்களா? கணு கணுவாக இருக்கும். இவை சித்த மருத்துவத்தில் முக்கியமான் மருந்துகள். பிரண்டையில் ஒரு உருண்டையான பழம் பழுக்கும். அதை சாப்பிடலாம். இனிப்பு சுவையுடன் இருக்கும். அதே போல பிரண்டையை சட்னியாக அரைத்து சாப்பிடலாம். விழுது விழுதாக அரைக்க வேண்டும். வழு வழு என்று அரைத்து விட கூடாது. புளிப்பும் துவர்ப்புமாக நல்ல சுவையுடன் இருக்கும். இதனை தக்காளி ரசத்திற்கு தொட்டுக்கொண்டால் எப்படி இருக்கும் தெரியுமா? அமிர்தம் அமிர்தம் என்று சொல்கிறார்களே.. அதேதான். முக்கியமான ஒரு விஷயம். பிரண்டை சட்னி சர்க்கரை நோய்க்கு மருந்து என்கிறார்கள். அடுத்தமுறை பிரண்டையை பார்த்தல் அதனுடன் friend ஆகி விடுங்கள்.

பொது மன்னிப்பு

இனிய நண்பர்களே, வெகு நாள் களைத்து பதிவது குறித்து வருந்துகிறேன். இனி பதிவுகள் தொடர்ந்து இருக்கும் என்று உறுதி கூறுகிறேன். கா.சு.துரையரசு