Posts

Showing posts from April, 2008

சென்னை எனும் பெருந்தெய்வம்

Image
நண்பர்களே, இது நிச்சயமாக ஒரு அரதப் பழசான ஒரு புகைப்படம் என்பது பார்த்த மாத்திரத்தில் உங்களுக்குப் புரிந்திருக்கும். ஆனால் இது எந்த கிராமத்தில் எடுத்த புகைப்படம் என்று தெரியுமா? சென்னையேதான். ஒரு நாள் நண்பர் ஒருவரின் கணிப்பொறியில் தட்டுப்பட்ட இப்புகைப்படத்தை வாங்கி பத்திரமாக சேமித்து வைத்துக்கொண்டேன். கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்.......... இந்த சென்னைப் பட்டணம் கிராமமாக இருந்தபோது அதன் வடிவம் எப்படி இருந்திருக்கும்? என்னென்ன மாதிரியான தொழில்கள் புழங்கியிருக்கும்?.......அன்றைய மக்கள் எவ்விதம் உடுத்தியிருந்திருப்பார்கள்? அவர்களின் பேச்சு வழக்கு மொழி எப்படி இருந்திருக்கும்? கணிக்கவே கடினமாக இருக்கிறதல்லவா? கடினம்தான். காரணம் இருக்கிறது. மாநிலத்தின் அனைத்துப் பகுதி மக்களுக்கும் வாழ்க்கை தரும் நம்பிக்கைக் கீற்றாக சென்னைப் பட்டணம் (சென்னப் பட்டணம் என்பதே சரி.) அன்றிலிருந்து இன்றுவரை இருக்கிறது. கெட்டும் பட்டணம் போய்ச் சேர் என்ற பழமொழிகூட அதனை ஒட்டி வந்ததுதான். இப்படி பொருளாதார வாழ்க்கையில் கெட்டுப்போனவர்கள் இறுதிப்புகலிடமான இப்பட்டணத்திற்கு வந்து குவியக் குவிய சென்னப்பட்டணம் மதராஸ் என்ற கம்பீ

சுடுகுஞ்சு

Image
கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு படித்த ஒரு செய்தியை உங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். எனது மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய எழுத்தாளர் திரு. மேலாண்மை பொன்னுச்சாமி அவர்களின் நூலில் கிடைத்த செய்தி அது. அநேககமாக 'சிறுகதைப் படைப்பின் உள்விவகாரம்' என்ற நூலாகத்தான் இருக்கும் என்று கருதுகிறேன். வேறு புத்தகமாகவும் இருக்கலாம். அதில் எழுத்தாளர் மேலாண்மை பொன்னுச்சாமி ஒரு அற்புதமான செய்தியைக் கூறுகிறார். அதாவது தென்மாவட்டங்களில் குறிப்பாக மதுரைக்கும் தெற்கே உள்ள மாவட்டங்களில் ஒரு சொல்லாடல் உண்டு. யாருமே இல்லாத கிராமத்துத் தெரு 'வெறிச்' என்று இருந்தது என்று இப்போதெல்லாம் எழுதுகிறோமே, அதற்கு மாற்றாக பொருள் நயமும் சொல் நயமும் மிக்க வாக்கியத்தை அம்மக்கள் பயன்படுத்துகிறார்கள். கடுமையான வெயில். சாலையில் கால் வைக்க முடியவில்லை. அதனாலும், வேலைக் காட்டிற்கு அவரவர் சென்று விட்டதாலும் கிராமமே வெறிச்சோடிக் கிடக்கிறது. இதனை தென் மாவட்ட மக்கள் ' தெருவிலே ஒரு சுடுகுஞ்சைக் கூட காணோம்' என்று குறிப்பிடுகிறார்கள். சுடுகுஞ்சு என்பது கோழிக்குஞ்சு. கிராமம் என்றால் கோழி, ஆடு, மாடு இல்லாமலா? ச
Image
இணைய நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம். கடந்த வாரம் எனக்கு குழந்தை பிறந்திருக்கிறது. எங்களின் எதிர்பார்ப்பைப் பொய்யாக்காத வகையில் பெண் குழந்தை பிறந்திருப்பது அனைவரையும் மகிழ்ச்சியடைய வைத்துள்ளது. இந்த மகிழ்ச்சியை அனைத்து நண்பர்களுடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். ஜோசிய, ஜாதக வல்லுநர்களுக்கு வேலை வைக்காமல் குழந்தைக்குப் பெயரும் சூட்டி விட்டோம். தூரிகை என்பது பெயர். நல்லது. குழந்தைப் பிறப்பை ஒட்டி எனக்கு கிடைத்த ஒரு தகவலை இன்று பகிர்ந்துகொள்கிறேன். எனது குழந்தை பிறந்த மூன்றாம் நாளன்று அதனைத் தூங்க வைப்பதற்காக தொட்டில் கட்டினோம். குழந்தையைத் தொட்டிலில் போடுவதற்கு முன்பு திசைகளைச் சரிபார்த்துக்கொண்டார்கள். மேற்கு கிழக்காகப் படுக்க வைத்து குழந்தையைத் தூங்க வைத்தோம். இது சாதாரணமாகப் பார்ப்பதற்கு மூடநம்பிக்கை போலத் தெரிந்தாலும் இதிலும் ஒரு அறிவியல் இருக்கிறது. பொதுவாக வடக்கு திசையில் தலை வைத்துப் படுக்காதே என்று கிராமத்தில் பெரியவர்கள் கூறுவார்கள். காரணம், மின் காந்தக் கதிர்கள் தெற்கு வடக்காகத்தான் பயணிக்குமாம். இது நமது தூக்கத்தையும், கனவுகளையும் பாதிக்கும் என்று ஒரு புத்தகத்தில் படித்தி

புகுமுன்............................

தமிழர்களின் அடையாளம் என்பதே கிராமங்கள்தாம், திரைகடல் ஓடியும் திரவியம் தேடிப் போனவர்களும் தங்கள் கிராமம் குறித்து தொலைக்காட்சியில் ஏதேனும் காட்சி இடடம்பெறும்போதோ அல்லது செய்தியைப் படிக்கும்போதோ இதயத்தின் அடிப்பகுதியை இனம்புரியாத கரங்கள் மென்மையாக வருடுவதை உணர முடியும், இந்த உணர்வுகளால் இணைக்கப்பட்ட ஒரு வலைதான் இன்றளவும் கிராமங்களின் புனிதத்தன்மையையும் யதார்த்தத்தையும் இந்த நவீன யுகத்திலும் உயிர்ப்பித்து வைத்திருக்கிறது, வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்களுக்கு மேலே சொன்ன கருத்து பொருந்தும் என்றhல் இந்தியாவின் வௌ;வேறு நகரங்களில் பிழைப்பு தேடிச்சென்று ஆங்காங்கே வாழ்ந்துகொண்டிருப்பவர்களுக்கு வேறெhரு விதமான வேதனை. நம் கண்ணெதிரே நமது கிராமங்கள் முன்னேறி வருவதை வெறுமனே பார்த்துக்கொண்டு மட்டுமே இருக்க முடிகிற வேதனை அவர்களுக்கு. கிராமத்தின் எளிமை. அன்பு. கரிசனம். உறவுகளோடு தங்களைப் பிணைத்துக்கொண்டு கிராமத்தின் வளர்ச்சியுடன் சேர்ந்தே வளர முடியாமல் போய்விட்டதே என்ற ஆதங்கம் ஒருபுறம், அதேபோல நமது சொந்த கிராமங்களுக்குச் செல்லும்போது தற்போது நகர்ப்புறங்களில் இன்று அனுபவித்துக் கொண்டிருக்கும் நவீன வசதிகள

vanakkam

Image
நண்பர்களே... நான் கா.சு.துரையரசு. பத்திரிகையாளர். திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் பகுதியில் உள்ள காளாஞ்சிபட்டி என்ற குக்கிராமத்தில் பிறந்தவன். இன்று நகரவாசியாக இருந்தாலும் நான் புழங்கிய கிராம வாழ்க்கை இன்னும் நெஞ்சுக்குள்ளேயே பசுமையாக இருக்கிறது. அதனைப் பகிர்வதற்கென்றே இந்த வலைப்பூ...