Posts

Showing posts from 2019

தலையைத்தட்டு

Image
காளாஞ்சிபட்டியில் எங்களுக்கு நொறுக்குத்தீனி அதிகம் கிடைக்கவில்லை. சாலைப்புதூரைப்போல அது ஒன்றும் பெரிய நகரமில்லை(!) என்பதே காரணம். மேலும் முழுக்க முழுக்க வானம் பார்த்த பூமி விவசாயம் என்பதே காளாஞ்சிபட்டி வாழ்க்கையின் அடிநாதமாக இருந்தது. அதனால் வெறுமையும் வறுமையும் காளாஞ்சிபட்டியைப் பீடித்து இருந்தன. காளாஞ்சிபட்டியில் எனக்குப் பிடித்த விஷயங்கள் மூன்று: 1.வெயில் 2.வேப்ப மரங்கள் 3.சாவடி. இவை ஒவ்வொன்றைப்பற்றியும் விரிவாக எழுத இருக்கிறேன். இப்போது நொறுக்குத்தீனி குறித்துப் பார்க்கலாம். அன்றைக்கெல்லாம் (1980களின் இறுதியில், 1990 களின் தொடக்கத்தில்) காளாஞ்சிபட்டியில் இரண்டே கடைகள்தான் இருந்தன. ஒன்று விஜயா அக்கா கடை (இன்றும் இருக்கிறது).  அவரை நான் அம்மா முறை வைத்துக்கூப்பிடுவேன். இன்னொரு கடை பொட்டிக் கடை அய்யன் என்று சொல்லப்படும் வாத்தியார் கடை. அவர் எனக்கு உறவினர். அப்பாரு முறை ( அப்பாவின் அப்பாவை கொங்கு மண்டலத்தில் அப்பாரு என்று சொல்வோம். அம்மாவின் அப்பா அப்பிச்சி என்றழைக்கப்படுவார். அவரை நாங்கள் தாத்தா என்று அழைப்போம்). வாத்தியார் கடையின் சிறப்பு, அது கொஞ்சம் பழை