புளியம் பிஞ்சு


புளியம் பிஞ்சு என்பது ரொம்ப சாதாரண விஷயம் என்று ஒருபோதும் நினைத்துவிடதீர்கள். புளியமரம் என்பது ஒரு கற்பக தரு மாதிரி. புளியமரம் எங்களது சிறு வயதில் ஏகப்பட்ட தின்பண்டங்களை வாரி வழங்கி இருக்கிறது. புளியம் பூ பார்த்திருக்கிறீர்களா? அதை கொஞ்சம் பிடுங்கி சாப்பிட்டுப் பாருங்கள். புளிப்பும் இனிப்புமாக புது சுவையாக இருக்கும். கொஞ்சம் துவர்ப்பும் தட்டுப்படும். பூ லேசாக பிஞ்சாக பரிணாமம் பெறும் . சுண்டு விரலைவிட மிக சிறிதாக இருக்கும். அப்படியே கடித்து சாபிடலாம். உடைத்தல் வெண்டைக்காய் போல ஓசை வரும். இந்த பிஞ்சுகளை அரைப்பதமாக அரைத்து (அரைக்கும்போது அதனுடன் கொஞ்சம் வெல்லம் , காய்ந்த மிளகாய் சிறிது உப்பு ஆகியவற்றையும் சேர்ப்பது அவசியம்). இந்த புளியம்பிஞ்சு துவையல் பற்றி கேட்கும்போதே உமிழ் நீர் சுரக்கிறதல்லவா! கிராமப்புறங்களில் பாக்கெட் மணி என்ற விசயமே எங்களுக்கு வைத்ததில்லை. எனவே இது போன்ற இயற்கை தின் பண்டங்கள்தான் எங்களின் உயிராக இருந்தது. அடுத்த பதிவில் புளியின் மற்ற அவதாரங்கள் பற்றி சொல்கிறேன்.


Popular posts from this blog

தலையில்லாத முண்டம்

கோவைப்பழம்