கம்பு எனும் தேவாமிர்தம்.



கிராமத்து தின் பண்டங்கள் வரிசையில் எனது இளம் பருவத்தில் கிடைத்த அற்புதமான மற்றொரு இயற்கை தின்பண்டம் கம்பு. கம்பங்கொல்லையில் (கம்பு காடு என்று சொல்லக் கூடாது) முற்றிய கம்பை உருவி, கையில் போட்டு கசக்கி, சோங்கு (அதில் உள்ள தூசு) நீக்கி சாப்பிடலாம். கடுக் கடுக் என்று நன்றாக இருக்கும். முற்றிய கம்பை கொண்டு வந்து வறுத்தும் தின்பார்கள். அனால் அது எனக்கு பிடிக்காது. முற்றும் நிலைக்கு முன்பு இருக்கும் கம்பு சுவையானது. மென்று தின்னும்போது அதில் பால்(சாறு) வரும். மிகுந்த சுவை தருவது அதுதான். கம்பை வேக வைத்து உண்டாலும் சுவையே.

காய்ந்த கம்பை எடுத்து உரலில் குற்றி (குத்தி என்பது கொச்சை தமிழ்) மாவாக்கி கம்பு மாவு உருண்டை செய்து சாபிடுவர்கள். கோவிலில் பிரசாதமாகவும் படைப்பது உண்டு. அந்த சுவை சிலருக்கு பிடிக்காது.

கம்பஞ்சோறு ஒரு நல்ல , சத்தான உணவு. கம்பன் சோற்றுக்கும் கருவாட்டுக் குழம்புக்கும் அப்படி ஒரு பொருத்தம். அதைவிட அற்புதம் அதை நீச்சுத் தண்ணீரில் (சோறு வடித்த நீர்) ஊற வைத்து மறு நாள் சாப்பிடுவது. கொஞ்சம் வசதியாக சாப்பிட்டால் தேவலாம் என்று தோன்றுகிறதா ? அப்படி நீச்சுத் தண்ணீரில் ஊறிய கம்பன்சோற்றை எடுத்து கொஞ்சம் தயிரில் கரைத்து அடித்து பாருங்கள். பூலோக சொர்க்கம் என்பதே அதுதான்.

Popular posts from this blog

தலையில்லாத முண்டம்

கோவைப்பழம்

புளியம் பிஞ்சு