Posts

ஆயிரம் ஜென்மங்கள்!

Image
இன்றைக்கு இன்றைக்குப் பேய்   என்பது நவீன வடிவம் பெற்றிருக்கிறது . முன்பெல்லாம் ’ ஆயிரம் ஜென்மங்கள் ’;  ’ பேய் வீடு ’ என்று பள்ளிப்பருவத்தில் நான் பார்த்து நடுங்கிய திரைப்படங்கள் இன்று மறுபடி ஓ . டி . டி . தளத்தில் பார்க்கும்போது நகைச்சுவை படங்கள் போல தோற்றமளிக்கின்றன . இன்றைக்கு பேய் என்பது கிராபிக்ஸ் , அனிமேஷன் என்று பல்வேறு தொழில்நுட்பங்களைப் பின்னணியில் வைத்துக்கொண்டுவந்து பயமுறுத்துகிறது . இன்றைய பேயைக் காட்டிலும் அன்றைய பேய் நவீனமாக இல்லாவிட்டாலும் நமக்கு உள்ளே கிடந்த பயம் என்னும் சிறிய பூச்சியை டைனோசர் அளவுக்குப் பெரிதாக்கி , நம் கண்முன்னே காட்டியது மறக்க முடியாதது . நீண்ட நாட்களுக்கு பிறகு ’ ஆயிரம் ஜென்மங்கள் ’ படத்தை ஓ . டி . டி . தளத்தில் பார்த்தேன் நீர்வீழ்ச்சியின் இறந்துவிடும் கதாநாயகி தன் சாவுக்கு காரணமானவர்களை அதேபோல நீர்வீழ்ச்சியில் வைத்தே கொல்துவதான் கதை . எப்போதெல்லாம்  நாயகி,  தண்ணீரில் கால் வைக்கிறாரோ அப்போதெல்லாம் கொலுசு ஓசை கேட்கும் . பேய்களுக்கும் கொலுசுக்கு உள்ள உறவை உறுதிப்படுத்திய பட